தளபதி விஜய்யின் லியோ தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.
அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த படம் ரிலீஸுக்கு முன்பே பல சாதனைகளை படைத்து வருகிறது.
லியோவின் பட்ஜெட் சுமார் 300 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. மேலும் படம் அதன் பட்ஜெட்டை வெளியீட்டிற்கு முன்பே சம்பாதித்துள்ளது.
உலகளாவிய திரையரங்கு உரிமைகள், டிஜிட்டல், ஆடியோ மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மூலம் தயாரிப்பாளருக்கு சுமார் 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளர் ரூ.200 கோடி லாபம் ஈட்டினார். லியோ செய்த வணிகம் இந்திய சினிமாவில் மிக உயர்ந்த ஒன்றாகும்.
லியோவின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை குறைந்தபட்ச உத்தரவாத அடிப்படையில் 100 கோடி ரூபாய்க்கு தயாரிப்பாளர் விற்பனை செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் இந்த அளவிற்கு வியாபாரம் ஆகி உள்ளது இதுவே முதல் முறை.
லியோ வெளிநாட்டுகளில் ரிலீஸ்க்கு முன்பே அதிக டிக்கெட்கள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.