உடலில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி, எலும்புகளை வலுவிழக்க செய்யும் உணவுகளை தவிர்ப்பது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
அதிக அளவில் உப்பு உட்கொள்வதால் உடலில் கால்சியம் அளவு குறைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் அபாயம் அதிகரிக்கிறது.
கேன்களில் அடைக்கப்பட்ட கார்பனேடட் பானங்கள் எலும்புகளுக்கு முக்கிய எதிரி. இவை கால்ஷியத்தை உறிஞ்சி நிர்மூலமாக்கி விடும்.
அதிக இனிப்பு உடலில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி ஆஸ்டியோபோரோஸிஸ் அபாயத்தை அதிகரிக்கிறது.
காபியில் காஃபின் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சுவதால், அளவுக்கு அதிகமாக காபி அருந்துவது நல்லதல்ல. எலும்பு அடர்த்தியையும் குறைக்கும்.
சோடா அதிக அளவில் குடிப்பதால், உடலில் உள்ள கால்ஷியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழந்துவிடும் என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அதிகப்படியான சிக்கன் இரத்தத்தில் pH சம்நிலையை பாதிக்கும். எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சப்பட்டு எலும்புகள் பலவீனமடையும்.
மது அருந்துவது எலும்பு அடர்த்தியை குறைக்கும் என எலும்பு மெலிதல் நோய் தொடர்பான ஆஸ்டியோபோரோசிஸ் அறக்கட்டளை அறிவுறுத்துகிறது.
இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.