தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் சமந்தா. பாலிவுட்டிலும் சில படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
தற்போது அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார்.
சமீபத்தில் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருந்தார் சமந்தா.
சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்.
தற்போது மும்பையில் வசித்து வருகிறார் சமந்தா.
இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் இரண்டாவது திருமணம் குறித்து கேள்வி கேட்டு இருந்தார்.
அதற்கு அனைவரையும் அசரவைக்கும் அளவிற்கு பதில் சொல்லி இருக்கிறார் சமந்தா.
2023ஆம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவீதம் 50 சதவீதம், 2வது திருமணம் செய்தவர்களின் விவகாரத்து 67 சதவீதம், 3வது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து 73 சதவீதம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.