மணி ரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தில் வரும் தமிழா தமிழா பாடல் நம் தேச உணர்வை தூண்டும் பாடலாகும்.
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான வந்தே மாதரம் பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.
1994ம் ஆண்டு ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் தாயின் மணிக்கொடி. வித்யாசாகர் இசையில் எஸ்.பி.பியின் குரலில் உருவான பாடல் தான் தாயின் மணிக்கொடி.
1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் இடம் பெற்ற கப்பலேறிப் போயாச்சு நாட்டுப்பற்று, வீரம், காதல் என அனைத்து உணர்வுகளை கொண்டுள்ளது.
அச்சம் அச்சம் இல்லை என்கிற பாடல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முணுமுணுக்கக் கூடிய ஒரு தேசப்பற்று பாடலாக மாறியது.
பாரத விலாஸ் படத்தில், இடம்பெற்ற இந்திய நாடு என் நாடு என்கிற பாடல் தேசப்பற்றை உணர்த்தும் பாடலாகும்.
பாரதி படத்தில் இடம்பெற்று இருந்த வந்தே மாதரம் என்கிற பாடல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தேசப்பற்றை ஊற்றெடுத்து ஓட வைத்தது.