சென்னையில் உள்ள அரக்கோணத்தில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர் தான் ஆண்ட்ரியா.
இவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர். ஆண்ட்ரியா தனது பத்து வயது முதல் பாட்டு பாடி வருகிறார்.
இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். TSMGO production என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
ஒரு பாடகியாக திரைத்துறைக்கு அறிமுகமாகி வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் 'கற்க கற்க' பாடல் பாடினார்.
அதன் பின்னர் அவருக்கு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமார் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நடிகையாக விஸ்வரூபம் எடுத்த ஆண்ட்ரியா செல்வ ராகவன் இயக்கத்தில் வெளியான ஆயத்தில் ஒருவன் படத்தில் நடித்தார்.
பின்னர், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார்.
அதன் பிறகு, கமல்ஹாசன் உடன் விஸ்வரூபம், வெற்றிமாறனின் வட சென்னை போன்ற படத்தில் நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.