ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாவது ஏன்?
குடிப்பழகத்துக்கு இளைஞர்கள் அடிமையாவது அதிகரித்துக் கொண்டு வருகிறது
சமூக சீர்கேட்டுக்கு காரணமான இந்த குடிப்பழக்கத்துக்கு ஏன் அதிகமானோர் அடிமையாகிறார்கள் என்பதை பார்க்கலாம்
மூளையில் இருக்கும் RASGRF-2 என்ற சிறப்பு வகை மரபணு இன்பத்தை தூண்டும் டொபமைனை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மது அருந்தும்போது டொபமைனின் அளவை அதிகரிக்கச் செய்து அதன் மீதான ஈர்ப்பை அதிகரிக்க செய்கிறது.
அதனாலேயே மதுப்பழக்கத்துக்கு அதிகமானோர் அடிமையாகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்
உடலில் RASGRF-2 என்ற மரபணுவைக் கொண்டவர்கள், விரைவாக மது அருந்தும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கின்றனர்
இந்த மரபணு இல்லாதவர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாவது வெகு சொற்பமாக இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குடிப்பழகத்துக்கு அடிமையாவதற்கு மரபணுக்கள் மட்டுமல்லாது சூழலும் மிக முக்கிய காரணமாம்