பெண்கள் உங்களை புறக்கணிக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
சூழலை உங்களுக்கானதாக மாற்றுங்கள். பாதிக்கப்பட்டவன் போல் செயல்படாமல் அவர்கள் முன்னிலையில் எல்லா இடங்களிலும் கம்பீரமாக, எல்லோருடன் சகஜமாக பழகவும்.
அவர்கள் முன்னிலையில் குறைவாக பேசுங்கள், சில நேரங்கள் அவர்கள் கண்ணில் படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை பற்றிய எந்த தகவலும் அவர்களுக்கு தெரியக்கூடாது
நீங்கள் அவர்களுக்காக இருப்பீர்கள் என எண்ணிக் கொண்டிருக்கும்போது, அப்படி இல்லை என்பதை உணர்த்திவிடுங்கள். வேறு யாரேனும் விரும்பினால் உனக்காக காத்திருக்க மாட்டேன் என்பதை புலப்படுத்திவிட வேண்டும்.
உங்களின் சமூக மதிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். நண்பர்கள் உள்ளிட்டோருடன் ஆரோக்கியமான பழக்கத்தை உருவாக்கி, உங்களையும் அழகாக உருவகப்படுத்தி, எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்
அவர்கள் உங்களுக்காக விளையாடும் விளையாட்டில் நீங்கள் விழ வேண்டாம். நீங்கள் உங்களுக்காக ஒரு விளையாட்டை உருவாக்கி அதை விளையாடுங்கள்
உங்களைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் மதிப்பீடுகளை எல்லாம் மாற்றிவிடுங்கள். நேர்மறையாக செயல்படுங்கள். அன்பு, சிரிப்பு, சரியான அணுகுமுறைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உடல் மொழி எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டும். உங்களின் எண்ணங்களை புலப்படுத்தும் வகையில் தெளிவான அணுகுமுறையோடு இருங்கள். தன்னம்பிக்கை, தைரியம் உங்களில் உடை, உடல்மொழியில் தெரிய வேண்டும்
சிறந்த ஆண்மகனுக்கான அடையாளங்கள் பெண்கள் உங்கள் மீது கொண்ட அவ மதிப்பீடுகளை உடைத்தெறிந்துவிடும். இதுவே உங்களுக்கான வெற்றியும் கூட
சின்ன சின்ன விஷயங்களில் நீங்கள் பெறும் வெற்றியை அவர்கள் பார்க்கும்போது, நிச்சயம் உங்கள் மீதான ஈர்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரிக்கும்.