திருமணம் செய்து கொள்ள சரியான வயது எது?
அண்மைக்காலமாக விவாகரத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக இளம் தம்பதிகள் அதிகமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
இதுகுறித்து மனநல ஆலோசகர்கள் பேசும்போது, வயதும் ஒரு காரணமாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.
எல்லா வயதினரிடையேயும் விவகாரத்து இருக்கிறது என்றாலும் இளம் தம்பதிகள் விவாகரத்து யோசிக்க வைத்திருக்கிறது.
25 வயது, அதற்கு மேல் திருமண பந்தத்தில் இணைவது என்பது சரியான வயதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை என்பது அப்போது இருவருக்கும் இடையே இருக்கும்.
எதை எப்போது செய்ய வேண்டும் என்ற புரிதலும், கலந்தாலோசித்தலும் தம்பதிகளிடையே இருக்கும் என கூறுகின்றனர்.
விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கும் நிலையில் வயது என்ற அடிப்படையில் இதுஒரு ஆலோசனை மட்டுமே.
அவரவர் வாழ்கை சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்க அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.