சரியான வயதில் சரியான நபரை திருமணம் செய்தால் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் திருமணத்தில் தாமதம் ஏற்பட்டால் பல பிரச்சனைகள் வரக்கூடும்.
திருமண வயதை தாண்டி மணமுடிக்கும்போது ஒருவரோடு ஒருவர் விட்டுக்கொடுத்து போவதில் பிரச்சனை ஏற்ப்டலாம்.
பெண்களுக்கு 30 வயதுக்கு பிறகு கருத்தரிக்கும் திறன் குறைகிறது. இதனால் தாமதமாக திருமணம் செய்து கொண்டால் குழந்தைப்பேறு பிரச்சனையாகலாம்.
30-35 வயது வரை பெரும்பாலானோர் பணம் ஈட்டுவதிலும், உலகின் பல விஷயங்களை தெரிந்துகொள்வதிலும் செலவழிக்கிறார்கள். இதன் பிறகு திருமணம் நடந்தால் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசி மகிழ எந்த வித சுவாரசியமும் இருக்காது.
தாமதமாக திருமணம் செய்தால் தாம்பத்ய உறவும் அத்தனை நன்றாக இருக்காது. ஏனெனில், வயதாக ஆக ஹார்மோன்களின் இயக்கமும் மந்தமாகிறது. உணர்ச்சிகளின் வேகமும் குறைகின்றது.
தாமதமாக திருமணம் செய்தால் நாம் பொறுமையாக யோசித்து நமது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க முடியாது. அதற்கான கால அவகாசம் கிடைக்காது.
தாமதமாக திருமணம் செய்தால், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான வயது வித்தியாசம் மிக அதிகமாகிறது. குழந்தைகள் படித்து முடிக்கும் போது பெற்றோரை வயோதிகம் எட்டி விடுகிறது.