எலும்புகளை வலுப்படுத்த, கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
உலர்ந்த அத்திப்பழம் கால்சியம் கொண்ட இனிப்பு மற்றும் சத்தான சிற்றுண்டியாகும்
சியா விதைகள் உங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். பால், சாலட், ஸ்மூத்தி, ஜூஸ் ஆகியவற்றில் சேர்த்துக் குடிக்கலாம்.
எலும்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள், அடிக்கடி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர மூட்டுக்களின் பிரச்சனைகள் நீங்கிக் குணமாகும்.
உங்கள் உணவில் ப்ரோக்கோலியை சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் கால்சியத்திற்கு ஒரு நல்ல விருப்பத்தைத் தேடுகிறீர்களானால், இது உங்களுக்கு சிறந்த காய்கறியாகும்.
தினமும் உங்கள் உணவில் பாதாமை சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை கால்சியம் குறைபாட்டை நீக்க உதவும்.
உடலில் கால்சியம் குறைபாட்டை போக்கவும், முதுமையிலும் எலும்புகளை வலுப்படுத்தவும் சோயாபீன் சாப்பிடலாம்.