விராட் கோலியை பார்த்தாலே நம் நினைவிற்கு வருவது அவரது பிட்னஸ் தான்.
இந்திய அணி வீரர்களில் நல்ல உடற்தகுதி கொண்ட வீரர்களில் விராட் கோலியும் ஒருவர்.
இந்த உலக கோப்பைக்கான விராட் கோலி சில டயட் பாலோ பண்ணுவதாக கூறப்படுகிறது.
விராட் கோலி தனது உணவில் பால் பொருட்களை எப்போதும் விரும்புவதில்லை, தேவைகளை பூர்த்தி செய்ய மாற்று உணவை தேர்வு செய்கிறார்.
விராட் கோலி நிச்சயமாக மது அருந்துவதில்லை. இது உடற்தகுதிக்கு முக்கியமானது.
விராட் அசைவம் சாப்பிடுவதில்லை, எனவே எப்போதும் சோயா மற்றும் டோஃபு போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை தனது உணவில் சேர்த்துக் கொள்கிறார்.
விராட் கோலி தென்னிந்திய உணவு பிரியர், எனவே அவர் தோசை அல்லது இட்லியை காலை உணவில் சேர்ப்பார்.
ராகி தோசையில் புரதம் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் உள்ளதால் விராட் தனது உணவில் ராகி தோசையை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.