தமிழ் புதல்வன் திட்டம் : மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தின் விதிமுறைகள்..!
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
இந்த உதவித்தொகை பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களாக இருத்தல் வேண்டும்
அரசு அல்லது உதவி பெற்றும் பள்ளிகளில் முறையே 8,9,10 வரை மட்டுமே படித்து தொழில் பயிற்சி நிறுவனத்தில் படித்தாலும் இந்த உதவித் தொகை கிடைக்கும்
கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள். இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி ....
மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும்.
தொலைதூர / அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது.
வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவராவர்.
மற்ற மாநில பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைய தகுதி அற்றவர்களாவர்.
ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம்.
பள்ளிப் படிப்பிற்கு பின்னர். உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவராவர்.
ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் (Integrated courses) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் முதல் மூன்று ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற இயலும்.