காரில் ஏசி இயங்கும் போது வழக்கத்தை விட அதிகமான எரிபொருள் செலவாகும். ஒரு மணி நேரத்திற்கு ஏசியை இயக்கினால் எவ்வளவு பெட்ரோல் செலவாகும்? பெட்டோல் மட்டுமல்ல, டீசல், சிஎன்ஜி, மின்சாரம் என எந்த எரிபொருளாக இருந்தாலும், காற்றின் வெப்பத்தை குறைக்க வாகனத்தின் எஞ்சின் எரிபொருளை கூடுதலாக செலவழிக்கும்
எரிபொருள் செலவு என்பது காருக்கு கார் வேறுபடும். இது, கார் மாடல், எஞ்சின் திறன் மற்றும் ஏசி செயல்திறன் ஆகியவற்றைப் பொறுத்தது, இர்நுதபோதிலும் பொதுவாக பார்த்தால், ஒரு காரில் ஏசியை பயன்படுத்தினால் அது எவ்வளவு எரிபொருளை பயன்படுத்தும் என தெரிந்துக் கொள்வோம்.
ஒரு காரில் 30 நிமிடம் ஏசி செயல்பட்டால் எவ்வளவு எரிபொருள் செலவாகும் என்பதன் அடிப்படையில் கணக்கீடுகளை செய்வோம்...
கார்களின் எஞ்சின் திறனைப் பொறுத்து எரிபொருள் நுகர்வு மாறுபடும். சிறிய கார்களில் 1.2 முதல் 1.5 லிட்டர் எஞ்சின்களும், பெரிய கார்களில் குறைந்தபட்சம் 2.0 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட திறம் கொண்ட என்ஜின்கள் இருக்கும்.
பெரிய எஞ்சின் திறன் கொண்ட வாகனங்கள், சிறிய திறன் கொண்ட எஞ்சின்களைவிட ஏசி அதிக பெட்ரோலை செலவளிக்கும்
1.2-1.5 லிட்டர் எஞ்சின் அளவு கொண்ட கார்களில் 30 நிமிடம் ஏசியை இயக்கினால், 0.1 முதல் 0.2 லிட்டர் பெட்ரோல் செலவாகும்
2.0 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட என்ஜின் அளவு கொண்ட கார்களில் 30 நிமிடம் ஏசியை இயக்கினால், தோராயமாக 0.3 லிட்டர் வரை பெட்ரோல் செலவாகும்