பெண் குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்

S.Karthikeyan
Nov 08,2024
';

'சுகன்யா சம்ரிதி யோஜனா'

'சுகன்யா சம்ரிதி யோஜனா' திட்டம் பெண் குழந்தைகளுக்கு உதவும் விதமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் வீட்டில் பெண்கள் இருந்தால், அவர்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற திட்டமாக இருக்கும்.

';

செல்வமகள் திட்டம்

இதன் மூலமாக பெற்றோர்களால் தங்கள் பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக பணத்தை சேமிக்க முடியும். தமிழ்நாட்டில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்ற பெயரால் இந்த ஸ்கீம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

';

பெண் குழந்தை திட்டம்

ஒன்றிய அரசால் பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக துவங்கப்பட்டது சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் பெண் குழந்தை பிறந்து 10 வருடங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் பணத்தை முதலீடு செய்யலாம்.

';

திட்டத்தின் முதிர்ச்சி

அதிகபட்சமாக 1.5 லட்சம் மற்றும் குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் டெபாசிட் செய்து இத்திட்டத்தினை துவங்கலாம். பணத்தை 15 வருடங்களுக்கு முதலீடு செய்யும் போது, 21 வருடங்கள் கழித்து முதிர்ச்சி அடையும்.

';

18 வயது வரம்பு

பெண் குழந்தை 18 வயதை அடையும் போதும், கல்வி செலவுக்கு டெபாசிட் செய்த தொகையில் இருந்து பாதியை எடுத்து கொள்ளும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது.

';

கணக்கு தொடங்கலாம்

பெண் குழந்தைகள் பிறந்த பத்து ஆண்டுகளில் பெற்றோர்கள் அல்லது அதிகாரபூர்வ பாதுகாவலர்கள் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் SSY ஓபன் பண்ணலாம். இந்த கணக்கை அதிகபட்சமாக ஒரு வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே திறக்க இயலும்.

';

8.2 சதவீத வட்டி

வேறெந்த திட்டத்திற்கும் இல்லாத அளவிற்கு தற்போது சுகன்யா சம்ரித்தி யோஜனாவிற்கு 8.2 சதவீத அளவில் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாற்றப்படுவது வழக்கம்.

';

VIEW ALL

Read Next Story