நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், இதனால் இன்னும் பல வித உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சில சமயலறை மசாலாக்கள் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கருப்பு மிளகு சுகர் லெவலை குறைக்க மிக உதவியாக இருக்கும். இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற தனிமம் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுகின்றது. இது சுகர் நோயையும் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
வெந்தய நீர் குடிப்பதால் நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். இதற்கு, இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை 1 கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
உடல் பருமனும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணமாகலாம். தினமும் உடற்பயிற்சி செய்வதும் உணவு கட்டுப்படும் உடல் எடையை குறைக்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.