இரவில் துணியில்லாமல் தூங்குவதால் கிடைக்கும் நம்பமுடியாத நன்மைகள்..!
இரவில் ஆடையுடன் தூங்குவதையே பலரும் விரும்பும் நிலையில், இரவில் ஆடை இல்லாமல் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை
நீங்கள் ஆடை இல்லாமல் தூங்கினால், வேகமாக தூங்குவீர்கள், தரமான தூக்கம் கிடைக்கும். இந்த தூக்கம் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளுக்கு வித்திடுகிறது
போதுமான தூக்கம் இல்லையென்றால் உங்களின் ஹார்மோன் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு லெப்டின் அளவைக் குறைக்கிறது. கிரெலின் அளவை அதிகரிக்கிறது.
இந்த ஹார்மோன்கள் தான் பசி, திருப்தி ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையவை. இது சரியாக இருந்தால் எல்லா விஷயங்களும் சரியாகவே நடக்கும்.
ஆடை இல்லாமல் தூங்கும்போது உங்களின் உடல் வெப்பநிலையும் குறைந்து ஆரோக்கியமான தூக்கம் கிடைப்பது உறுதியாகிறது,
நன்றாக தூங்கும்போது மன அழுத்தம், பதட்டம் இருக்காது. தெளிவான சிந்தனையுடன் எல்லா விஷயத்திலும் கவனமாக செயல்படுவீர்கள்.
ஆடை இல்லாமல் தூங்குவது ஆண் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆடையோடு தூங்கும்போது உடல் வெப்பநிலை அதிகரித்து விந்தணுக்களை குறைகிறது.
ஆடைகள் இல்லாமல் உங்கள் துணையுடன் உறங்குவது நெருக்கத்தில் ஈடுபடும் விருப்பத்தை அதிகரிக்கும். தம்பதியரின் தாம்பத்தியம் மேம்படும்.
ஆடை இல்லாமல் தூங்குவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதன் மூலம் அதிக பிபி மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தவிர்க்கலாம்.