எலுமிச்சை மற்றும் தேனை கலவையை காலையில் குடித்தால் உடல் எடை குறையும் என்று படித்து இருப்போம்.
இந்த கலவையில் உள்ள பல ஆரோக்கிய நன்மைகள் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுவதாக கூறப்படுகிறது.
ஆனால் இவற்றை காலையில் குடிப்பது அனைவருக்கும் பயனளிக்காது. யார் யார் இதனை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
செரிமானம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் இவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
வயிற்றில் புண் அல்லது வாயு பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை மற்றும் தேன் கலவையை தவிர்க்க வேண்டும்.
தேனில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே இவற்றை நீரழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை பற்களை பலவீனமாக்கும். எனவே பல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் எந்தவித புதிய பானத்தையும் கர்ப்பிணிகள் சாப்பிட கூடாது.