உணவுகள் உங்கள் உட்புறம் மட்டுமல்லாமல், உடலின் வெளிப்புறத்தையும் பாதிக்கும்.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் உங்கள் சருமம் அழகாக, பளபளப்பாக இருக்கும்.
நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான சருமத்தை பெற உடல் நீரேற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஈரப்பதமூட்டும் தடையை சரிசெய்து சருமத்தை ஊட்டமளிக்க நீரேற்றம் முக்கியம்.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உடற்பயிற்சிகளை தினசரி வழக்கத்தில் சேர்க்க வேண்டும்.
உறுதியான தசைகள் ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது உங்கள் சருமத்தின் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
தொடர்ந்து சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் போது, சூரிய ஒளி, தோல் புற்றுநோய் மற்றும் வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது.