2704 மைல் தூரத்தை கடக்கும் இந்தியன் பசிபிக் மிக நீண்ட சொகுசு ரயில் பயணத்தை வழங்குகிறது. ஆஸ்திரேலியாவில் பல்வேறு சுற்றுலா தலங்களில் 4 பகல் & 3 இரவுகள் பயணிக்கும் ரயில்
இந்தியாவின் முதல் சொகுசு ரயில் சேவையான பேலஸ் ஆன் வீல்ஸ் 1982 இல் நிறுவப்பட்டது மிகவும் பிரபலமான ரயில்களில் ஒன்றாகும்
இந்தியாவின் மிக ஆடம்பரமான சொகுசு ரயில் 2007இல் முதல் செயல்படுகிறது. தரமான ரயில் என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது.
36 பயணிகளை பயணிக்கக்கூடிய ராயல் ஸ்காட்ஸ்மேன்உலகின் சிறந்த சொகுசு சேவைகளை வழங்குகிறது. திறந்த வெளியில் நின்று இயற்கையை ரசிக்க ரயிலில் வராண்டாவும் உள்ளது
2007இல் தொடங்கப்பட்ட கோல்டன் ஈகிள் விருந்தினர்களை மகிழ்விக்க இரண்டு வெவ்வேறு வகையான தங்குமிடங்களைக் கொண்டுள்ளது
தென்னாப்பிரிக்காவில் இயங்கும் பிரைட் ஆஃப் ஆப்ரிக்கா 9 நாட்களில் 2,000 மைல் தூரம் பயணிக்கிறது. கலைஞர்கள், இயற்கை & வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் இதில் பயணிக்கின்றனர்
வெனிஸ் சிம்ப்ளான் தனது பயணிகளை பிரான்சின் பாரிஸிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு 6 நாட்களில் பயணிக்கிறது
12 நாட்கள் பயணிக்கும் ராக்கி மவுண்டியனீர் கோல்ட் லீஃப், சில்வர் லீஃப், ரெட் லீஃப் மற்றும் விஸ்லர் சர்வீஸ் என 4 வகையான பேக்கேஜ்கள் உள்ளன
தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட மற்றொரு சொகுசு ரயில் ப்ளூ டிரெயின் உயர்ந்த சேவைக்காக பல விருதுகளை வென்றுள்ளது.
ஈஸ்டர்ன் மற்றும் ஓரியண்டல் எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர், தாய்லாந்து & மலேசியா போன்ற இடங்களுக்கு செல்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயணிக்க சிறந்த ரயில்