மாசிக்காயின் மருத்துவ நன்மைகள்..!

S.Karthikeyan
Nov 09,2024
';


மாசி மரங்களிலிருந்து கிடைக்கக்கூடியதே மாசிக்காய். மாசி மரத்தின் கிளைகளை பூச்சிகள் துளையிடும்போது, அந்த கிளையிலிருந்து வடியும் பால், நாளடைவில் காய்ந்து கெட்டியாகிவிடும். இதுவே மாசிக்காய் எனப்படும்.

';


அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வீடுகளில் கட்டாயம் வைத்திருந்த மருந்து இதுவாகும். சுவாச கோளாறுகளுக்கு இந்த மாசிக்காய் உதவுகிறது. டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு, தொண்டை வலி பிரச்சனைகளுக்கு மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

';


அதேபோல வாய்ப்புண்கள், ஈறுகளில் ரத்தம் வடிவது, தொண்டை வலி போன்றவை இருந்தால், மாசிக்காயை பவுடர் செய்து, வெந்நீரில் போட்டு மூடிவைத்துவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து, அந்த நீரை மட்டும் வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் மேற்கண்ட கோளாறுகள் சரியாகும்.

';


உடலிலுள்ள காயங்களை ஆற்றக்கூடிய தன்மை மாசிக்காய்களுக்கு உள்ளது. எனவே, கட்டிகள், புண்கள், ரணங்கள் இருந்தால், மாசிக்காயை அரைத்து தடவலாம்.. அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு புண்கள் வந்தால் உடனே ஆறிவிடாது.

';


அந்த புண்களை ஆற்றக்கூடியதாக இந்த மாசிக்காய் திகழ்கிறது. ஆசனவாய் வெடிப்புகள், மூலநோய் எரிச்சல் இருந்தால், மாசிக்காயை நீரில் குழைத்து, வெடிப்புள்ள பகுதியில் தடவி வரலாம்.

';


பச்சிளம் குழந்தைகளுக்கு உரைமருந்தாக பயன்படுத்தப்படும் இந்த மாசிக்காய், நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், மாசிக்காயை தூளாக்கி, தேனில் 1 ஸ்பூன் கலந்து தருவார்கள்.

';


மாசிக்காயை தாய்ப்பால் விட்டு இழைத்தும் குழந்தையின் நாவில் தடவுவார்கள். அதேபோல, குழந்தைகளின் நாக்கில் மாவு போல வெள்ளை நிறத்தில் படிந்திருப்பதை அகற்றவும் இந்த மாசிக்காய் உதவுகிறது.

';


கால் இடுக்குகளில் சேற்றுபுண்களுக்கும், மாசிக்காயை நீரில் குழைத்து தடவி வரலாம்.. மாசிக்காய் பட்டைகளில் கஷாயம் வைத்து குடித்தால், இருமல், சளி கட்டுப்படும்..

';


பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால், இந்த மாசிக்காயை பொடி செய்து, ஒருநாளைக்கு 3 முறை சாப்பிட்டால், ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தாலும், மாசிக்காய் பவுடருடன் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

';


மாசிக்காய் பட்டையை ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம் போகுதல், ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், இப்படி மருந்தாக உட்கொள்ளும்போது மருத்துவர்களின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

';

VIEW ALL

Read Next Story