இளநீர் வெயில் காலங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் நன்மை அளிக்கிறது
உடலை நீரேற்றமாக வைத்திருக்க இளநீரை அதிகம் பயன்படுத்தலாம்.இதன் சுவையும் மிக நன்றாக இருக்கின்றது.
ஒரு கிளாஸ் இளநீரில் எலுமிச்சை மற்றும் சியா விதைகள் சேர்த்து 40 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து பின்னர் குடிக்கவும்
இளநீரை சியா விதைகளுடன் சேர்த்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வெயில் காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைக்க இளநீருடன் புதினா இலைகளை சேர்த்து குடிக்கலாம்
இது இரண்டையும் ஒன்றாக உட்கொண்டால் வெப்பத்தால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்கலாம்
இளநீருடன் எலுமிச்சை நீர் கலந்து சாப்பிடுவதால் சருமத்தில் இயற்கையான பொலிவு ஏற்படும்
இளநீருடன் தேன் கலந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு செரிமானமும் சீராகிறது