பொதுவாக நடிகைகள் தங்கள் தோல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
தென்னிந்திய நடிகைகளைவிட பாலிவுட் நடிகைகள் மேக்கப்பிற்கு அதிகம் செலவு செய்கின்றனர்.
தற்போது பலரும் முகத்திற்கு ஐஸ் வாட்டர் ஃபேஷியல் செய்கின்றனர்.
கத்ரீனா கைப் ஒரு வீடியோவில், ஞாயிற்றுக்கிழமை எழுந்திருக்க சிறந்த வழி என்று முகத்திற்கு ஐஸ் வாட்டர் ஃபேஷியல் செய்தார்.
ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில், ஆலியா பட் தனது ஐஸ் வாட்டர் ஃபேஷியலைப் பகிர்ந்து, இந்த சிகிச்சை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க முகத்திற்கு ஐஸ் வாட்டர் ஃபேஷியல் செய்வதாக தமன்னா கூறியுள்ளார்.
நடிகை பெல்லா ஹடிட் ஐஸ் வாட்டர் பேசியல் வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஸ்மிருதி கண்ணா இது எப்போதும் மலிவான மற்றும் சிறந்த தோல் பராமரிப்பு முறை என்று, தனது ஐஸ்-வாட்டர் ஃபேஷியல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.