அவசர வேலை என்றால் மட்டும் வீட்டில் இருந்து வெளியே செல்லுங்கள். முடிந்தவரை வீட்டிற்குள் இருங்கள்.
வீட்டில் வெப்பத்தை குறைக்க ஜன்னல்களை திறக்க வேண்டாம். இரவில் மட்டும் திறந்து வைப்பது நல்லது.
வெயில் காலத்தில் 3 வேளை குளிப்பது உடலுக்கு நல்லது. ஈரத்துணியை வைத்து உடலை கூலிங்காக வைத்து இருக்கலாம்.
பருத்தி அல்லது கைத்தறியால் செய்யப்பட்ட தளர்வான ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளைத் தேர்வு செய்வது நல்லது. நான் வெஜ்ஜை தவிர்ப்பது நல்லது.
பருத்தி அல்லது லேசான துணியால செய்யப்பட்ட பெட்சீட்களை பயன்படுத்தவும். முடிந்தவரை பெட்டில் தூங்காமல் தரையில் படுப்பது நல்லது.
வீட்டில் வெயிலை தாங்க முடியவில்லை என்றால் பொது பகலில் பொது இடங்களில் உள்ள ஏசியை பயன்படுத்தி கொள்ளவும்.
வெயில் காலத்தில் மாலை நேரத்தில் உடற்பயிற்சி அல்லது கடினமான வேலைகளை தவிர்க்கவும்.