SIP எனப்படும் சிஸ்டமெடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான், ஒரு நிலையான தொகையை சீரான இடைவெளியில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு வழிவகை செய்யும் மியூசுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டம் ஆகும்.
இதில் உள்ள காம்பவுண்டிங் முறை மூலம் முதலீட்டாளர்கள் நல்ல வருவாயை பெறலாம்.
பணியில் சேர்ந்தவுடனேயே எஸ்ஐபி -ஐ துவக்கினால் நல்ல வருவாய் கிடைக்கும்.
தொடர்ந்து இதில் முதலீடு செய்து வந்தால் காம்பவுண்டிங் உதவியுடன் பெரிய கார்பஸை உருவாக்கலாம். பெரிய தொகைக்கான உங்கள் இலக்கை அடைய வேண்டுமானால் நடுவில் எஸ்ஐபி -ஐ நிறுத்தாமல் இருக்க வேண்டும்.
தற்போது SIP -இல் செய்யப்படும் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகும். SIP -இல் முதலீடு செய்ய அதிகப்பட்ச வரம்பு ஏதும் இல்லை. காம்பவுண்டிங் வட்டி விகித முறை,SIP முதலீட்டை பெரிய அளவில் அதிகமாக்க உதவுகிறது.
30 வயதில் ஒரு முதலீட்டாளர் SIP ஐ துவக்கி அவருக்கு 60 வயது ஆகும் வரை முதலீடு செய்தால் ரூ.10 கோடி கார்ப்பஸ் என்ற இலக்கை அடைய முடியும்.
உதாரணமாக 30 வயதில், மாதம் 15,400 ரூபாய் முதலீட்டை ஆரம்பித்து 60 வரை தொடர்ந்து முதலீடு செய்தால் மொத்தம் 64,68,000 ரூபாய் முதலீடு செய்வார். எதிர்பார்க்கப்படும் வருவாய் விகிதம் 12 சதவீதம். வட்டியாக சுமார் ரூ.9,35,59,143 பெற முடியும். முதிர்வுத் தொகை ரூ.10,00,27,143 ஆக இருக்கும்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.