அவகோடா செடியை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி?

S.Karthikeyan
Jul 28,2024
';


அவகோடா பழம் மார்க்கெட்டில் வாங்குங்கள். பூச்சிகள் இல்லாத ஆரோக்கியமான பழத்தை வாங்கவும்

';


வீட்டில் வந்து அப்பழத்தின் விதையை எடுத்து வெதுவெதுப்பான நீரில் சுத்தமாக கழுவ வேண்டும்

';


பின்னர் அந்த அவகோடா விதையை பாலித்தீன் கவரில் போட்டு, வெயில் படாத இடத்தில் சில வாரங்களுக்கு வைக்கவும்

';


இப்போது அவகோடா விதையில் இருந்து முளைப்பு வந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். மேல், கீழ் பாகம் எது என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும்

';


இதனையடுத்து ஒரு கன்டெயினர் அல்லது கிளாஸில் தண்ணீர் நிரப்பி வேர் பகுதி கீழ் இருக்குமாறு வைக்கவும். சூரிய ஒளிபடும் இடத்தில் அதனை வைக்கவும்

';


இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அந்த தண்ணீரை மாற்றிக் கொண்டிருங்கள். அந்த விதையில் இருந்து செடி கொஞ்சம் பெரிதாக வளரும் வரை இவ்வாறு செய்யவும்

';


இதனையடுத்து ஒரு பானையில் மண் நிரப்பி சிறிய அளவு வளர்ந்திருக்கும் அவகோடா செடியை அதில் நட்டு வைக்கவும். பிறகு நிரந்தரமான தோட்ட இடத்தில் நடவும்

';


செடிக்கு எப்போதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தொடர் பராமரிப்பு, கண்காணிப்பு அவசியம்.

';


மூன்று முதல் 5 ஆண்டுகள் காத்திருந்தீர்கள் என்றால் நீங்கள் நட்டு வைத்த அவகோடா செடியில் இருந்து பழம் சாகுபடியாகும்.

';

VIEW ALL

Read Next Story