முதுமை என்பது தவிர்க்க முடியாதது தான் என்றாலும், சில தவறுகளால் முதுமை குறைந்த வயதிலேயே நம்மை ஆட்கொண்டு விடும்.
தவறான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகியவை நம் உடல் நலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நீண்ட நாள் இளமையோடு இருக்க விரும்பினால், சில தவறுகளை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது.
துரித உணவுகள் உடல் நலத்தை மட்டுமின்றி சரும ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால், நம் உடல் வலுவை இழந்து, பலவீனம் ஆகிவிடும்.
அதிகமாக அளவில் குடிக்காமல் இருப்பது, சருமத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கும்.
புகை பிடிப்பதன் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் தோன்றும்.
மது அருந்துதல் காரணமாக கல்லீரல் பாதிக்கப்பட்டு, பலவிதமான நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.
தூக்கமின்மை காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, மன அழுத்தமும் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)