ஆரோக்கியமான எலும்புகளை பெற கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
பால் பொருட்கள், பாதாம் மற்றும் ப்ரோக்கோலி ஆகியவை கால்சியத்தின் நல்ல மூலமாகும்.
வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். கால்சியத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி தேவை.
வைட்டமின் டி குறைபாடு எலும்பு அடர்த்தி குறைவதற்கு காரணமாக அமைகிறது. இது எலும்பு முறிவு அபாயத்தையும் அதிகரிக்கிறது.
வைட்டமின் டி வயதான பெண்களில் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.
காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். இவை எலும்பு உருவாக்கும் செல்கள் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன.
அதிக கலோரிகளைக் குறைப்பது உங்கள் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
வலுவான எலும்புகளை பராமரிக்க, ஒரு நாளைக்கு குறைந்தது 1,200 கலோரிகள் தேவைப்படுகிறது.