கோடைக்காலத்தில் யூரிக் அமில அளவை குறைத்து மூட்டு வலியில் நிவாரணம் காண இந்த உணவுகளை உட்கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் பியூரின் மிக குறைவாக உள்ளது. இதை உட்கொள்வதால் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்காது.
காளானில் உள்ள பீடா க்ளூகன்ஸ் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைத்து யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது.
கிவி உட்கொள்வதால் உடலில் தேங்கியுள்ள நச்சுகள் எளிதாக சிறுநீர் மூலம் உடலை விட்டு வெளியேறுகின்றன.
ஆப்பிள் இரத்தத்தில் யூரிக் அமிலம் படிகங்களாக டெபாசிட் ஆவதை தடுக்கிறது. யூரிக் அமில நோயாளிகள் இதை கண்டிப்பாக உட்கொள்ளலாம்.
கோடைக்காலத்தில் யூரிக் அமில நோயாளிகள் பூசணிக்காய் உட்கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
காபி குடிப்பது யூரிக் அமில அளவை குறைக்க உதவும், ஆனால் இதை அளவோடு பருக வேண்டும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.