ஹீட் ஸ்ட்ரோக் வருவதை முன்கூட்டியே சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.
உடலில் திடீர் என்று அதிக வெப்பநிலை இருந்தால் ஹீட் ஸ்ட்ரோக்கின் முதல் அறிகுறியாகும்.
மன நிலை சற்று குழப்பமாக இருந்தாலோ அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டாலோ இதன் அறிகுறியாகும்.
குமட்டல், வாந்தி அடிக்கடி ஏற்பட்டால் ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறியாக இருக்கலாம்.
உடலில் தோல்கள் சிவந்த நிலையில் மற்றும் வறண்டு காணப்படும்.
வெப்பம் உடலில் அதிகமாக இருந்தால் தலைவலி ஏற்படும்.
சில சமயங்களில் இதய துடிப்பு அதிகமாக இருக்கும். இதுவும் ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறியாகும்.
ஹீட் ஸ்ட்ரோக் வந்தால் தலைச்சுற்றல் ஒரு பொதுவான அறிகுறியாகும். சில நேரங்களில் மயக்கமும் ஏற்படும்.