ஒன்பது கிரகங்களும் என்னென்ன தொழில்களுக்கு காரகத்துவம் பெற்று விளங்குகின்றன என்பதை தெரிந்துக் கொண்டு, ஒருவர் செய்யும் தொழில் அல்லது வேலையை செய்தால், நிம்மதியாகவும் விருப்பதுடனும் வேலை செய்யலாம்
ஆபரணங்கள், ஆட்சிபணி, காவல்துறை, ராணுவம், மருத்துவம் போன்ற முக்கியமான துறைகளுக்கு காரகத்துவம் பெற்றவர் சூரியன். சூரியனின் ஆட்சி உச்சம் பெற்று இருப்பவர்கள் இந்தத் துறைகளில் ஈடுபடலாம்
விவசாயம் உள்ளிட்ட உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள், வியாபாரம், சேவைத் துறையில் சந்திரன் உச்சம் பெற்ற ஜாதகர்கள் ஈடுபடலாம்
விளையாட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அதிபதியாக இருக்கும் செவ்வாய், அலுமினியம் சார்ந்த தொழில்கள், உலோகம் தொடர்பான தொழில்களுக்கும் காரகத்துவம் பெற்றவர்
ஞானக்காரகர் புதன், புத்தி மற்றும் சிந்திக்கும் வேலைகள் அனைத்திற்கும் அதிபதி. கலை, இலக்கியம் மற்று பேச்சுத்திறமை தேவைப்படும் தொழில்கள் அனைத்தும் புதனின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் ஈடுபடலாம்.
பொருளாதாரம், சட்டத்துறை, தொழில், ஆலயப் பணிகள் மற்றும் அரசாங்க ஆதரவுடன் இயங்கும் துறைகளுக்கு குரு பகவான் தான் அதிபதி என்பதால், குருவின் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்தத் தொழில்கள் செட்டாகும்.
ஆடம்பரம் சார்ந்த தொழில்கள், துணித்துறை, பொழுதுபோக்கு துறை, நடனக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் போன்றவற்றிற்கு சுக்கிரன் அதிபதி. சுக்கிரனின் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இவை தான் ஏற்றத் துறைகளாக இருக்கும்
நீதி வழுவாமல் பலன்களைக் கொடுக்கும் சனீஸ்வரருக்கு உகந்தது, சட்டத்துறை, வக்கீல், உளவுத்துறை, ,இரும்பு சம்பந்தப்பட்ட துறைகள் ஆகும்
நிலக்கரி தாதுப்பொருட்கள், கனிம வளங்கள், இயற்கை வளங்கள்,போக்குவரத்து துறை, மின்சாரத் துறை,ரசாயனம் சார்ந்த தொழில்கள் ராகுவுக்கு உரியவை. கேதுவுக்கு காரகத்துவம் கிடையாது
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது