இரவு தாமதமாக தூங்கினால் வேலை நேரத்தில் தூக்கம் வரும். இரவில் 7-8 மணிநேரம் தூங்குவது நல்லது.
அதிக விழிப்புடனும், கவனத்துடனும் வேலை செய்ய தினசரி அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யாமல், அவ்வப்போது நடப்பது, பேசுவது மனதை புத்துணர்ச்சியடைய வைக்கும்.
வேலைக்கு செல்வது, சாப்பிடுவது, தூங்குவது என இல்லாமல் தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது.
வேலை நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல், லேசான மற்றும் சீரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
நீண்ட நேரம் ஏசியில் இல்லாமல் அவ்வப்போது வெளியில் சென்று இயற்கை காற்றை சுவாசிக்க வேண்டும்.
பணியில் சோர்வு காரணமாகவும் தூக்கம் வரலாம். எனவே அதனை தவிர்ப்பதற்கான வேலைகளை செய்யுங்கள்.