UPS -இல் ஒரு அரசு ஊழியர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடைசியாக பணிபுரிந்த 12 மாதங்களில் பெறப்படும் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீத தொகை உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக இருக்கும்.
உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தைத் தவிர, UPS பணவீக்க இண்டெக்சேஷனையும் வழங்குகிறது. இதில் குறைந்தபட்சம் மாதம் ரூ 10,000 ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கும். இந்த வசதிகள் என்பிஎஸ் இல் இருக்கவில்லை.
குடும்ப ஓய்வூதியம் ஓபிஎஸ் (OPS) அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme) ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்றவர் கடைசியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
UPS -இல் சூப்பர்ஆனுவேஷனில் மொத்த தொகை மற்றும் பணிக்கொடை (Gratuity) ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இது அரசாங்கத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மாதாந்திர ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 1/10 என கணக்கிடப்படும்.
NPS இலிருந்து UPS -க்கு கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய அம்சம் பங்களிப்பு மற்றும் முழு நிதியுதவி திட்டமாகும். இதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதிய நிதிக்கு பங்களித்து, அதன் மூலம் ஓய்வு பெறும்போது அதிக ஓய்வூதியத்தையும் உறுதி செய்துகொள்ளலாம்.
UPS -இன் கீழ், அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 வருட சேவையை முடித்த பிறகு ஒரு நிலையான ஓய்வூதியத் தொகைக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். 25 வருட சேவையை முடித்த பிறகு, சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% தொகையை ஓய்வூதியமாகப் பெற முடியும்.
யுபிஎஸ் ஊழியர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும். சந்தையுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதால், NPS இன் கீழ் ஓய்வூதியத் தொகையில் மாற்றங்கள் இருக்கும்.
யுபிஎஸ் ஒரு உறுதியான ஓய்வூதியத்தை அளித்தாலும், சந்தை-இணைக்கப்பட்ட முதலீடுகளில் அதிக வருமானம் இருக்கும் போது, சில சமயங்களில் NPS அதிக ஓய்வூதியத் தொகையை வழங்க முடியும். இருப்பினும் சந்தை வீழ்ச்சியடைந்தால் நிலைமை நேர்மாறாக இருக்கும்.
எந்த ஆபத்தும் இல்லாமல் உத்தரவாதமான ஓய்வூதியத் தொகையை விரும்பும் ஊழியர்களுக்கு UPS மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
அதிக வருமானத்தை இலக்காகக் கொண்டவர்களுக்கும், சந்தை அடிப்படையிலான முதலீடுகளைச் செய்து ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கும் NPS மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. NPS அல்லது UPS-இல் முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. UPS குறித்த சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.