உங்கள் முதலாளி அல்லது மேனேஜரிடம் ஒரு தொழில்முறை உறவை பராமரிப்பது ஆரோக்கியமான வேலை உறவுக்கு அவசியம்.
உங்கள் வாழ்க்கையின் சில அம்சங்கள் ரகசியமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடாத சில விஷயங்கள் உள்ளன.
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை உங்கள் முதலாளி அல்லது மேனேஜரிடம் பகிர்வது நல்ல யோசனையல்ல.
நீங்கள் எதைப் பகிர்கிறீர்கள் மற்றும் எதைத் தவிர்க்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உளறிவிட கூடாது.
டீம் வீரராக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். ஒரு குழுவுடன் வேலை செய்ய விரும்பவில்லை என்றால், அது உங்கள் முதலாளிக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தாது.
உங்கள் முதலாளியிடம் உங்களை பற்றி முழுவதுமாக சொல்வது நல்லதல்ல.
சக ஊழியர்கள் அல்லது ஜுனியர் சொல்லக்கூடிய விஷயங்களை மதிப்புடன் கேட்டு கொள்ளுங்கள்.
உங்கள் தனிப்பட்ட உடல் பிரச்சனைகள் குறித்து முதலாளியிடம் தெரிவிக்க வேண்டாம்.
அரசியல், சமூக மற்றும் மத நம்பிக்கைகள் பற்றிய கருத்துக்களை உங்கள் முதலாளியுடன் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல.