குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் எப்போதும் ஹெட்லைட் பயன்படுத்த வேண்டும்.
அதே போல எதிரில் வரும் வாகனங்கள் கிட்டே நெருங்கும் போது ஹெட்லைட் பயன்படுத்த கூடாது.
இரவில் வாகனத்தை எடுக்கும் முன்பு கண்ணாடிகளை நன்கு சுத்தமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
எப்போதும் உங்களுக்கு முன்னாள் செல்லும் வாகனத்திற்கு, உங்கள் வாகனத்திற்கு இடையில் நல்ல இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இரவில் வாகனம் ஓட்டும் போது தூக்கம் வந்தால் உடனே வண்டியை நிறுத்திவிடவும். இது விபத்துகளை தவிர்க்க உதவும்.
பகலிலும் சரி இரவில் சரி அதிக வேகத்தில் பயணிப்பது ஆபத்தானது. எனவே மிதமான வேகத்தை எப்போதும் கடை பிடிக்கவும்.
இந்திய சாலைகளில் நாய், மாடுகள் தொல்லை அதிகம் இருக்கும். எனவே கவனமுடன் செல்ல வேண்டும்.
எப்போது சாலையில் இடது புறம் சென்று பழகுங்கள். இதன் மூலம் பெரும்பாலான விபத்துகளை தவிர்க்க முடியும்.