ஐடிஆர் தாக்கல் செய்யும் முன் அது தொடர்பான சில அத்தியாவசிய விஷயங்களை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். வருமான வரித்துறை மூலம் வெளியிடப்படும் 7 விதமான படிவங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரூ. 50 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள இந்திய குடிமக்களுக்கான படிவம் இது. பெரும்பாலான சம்பள வருக்கத்தினர் இந்த படிவத்தை பயன்படுத்தி வருமானத்தை தாக்கல் செய்கின்றனர். ரூ.50 லட்சம் என்பது சம்பளம், ஓய்வூதியம், வீட்டின் சொத்து மூலம் வரும் வருமானம் மற்றும் பிற ஆதாரங்களை உள்ளடக்கியது.
ஒருவரது வருமானம் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருந்தால் படிவம் 2ஐப் பயன்படுத்த வேண்டும். இந்த படிவம் ஒன்றுக்கு மேற்பட்ட குடியிருப்பு சொத்துக்களின் வருமானம், முதலீடுகளின் மூலதன ஆதாயங்கள், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள டிவிடெண்ட் வருமானம் மற்றும் ரூ. 5000க்கு மேல் உள்ள விவசாய வருமானம் ஆகியவற்றுக்கு பொருந்தும்.
வணிக உரிமையாளர்கள், பட்டியலிடப்படாத ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்பவர்கள் அல்லது நிறுவனத்தில் பங்குதாரர்களாக சம்பாதிப்பவர்கள் படிவம் 3 -ஐப் பயன்படுத்த வேண்டும். வட்டி, சம்பளம், போனஸ், மூலதன ஆதாயங்கள், குதிரைப் பந்தயம், லாட்டரி அல்லது சொத்துக்களிலிருந்து வாடகை மூலம் வருமானம் வந்தால், அவர்களுக்கும் இது பொருந்தும். ஃப்ரீலான்ஸர்களும் இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வருமானம் உள்ள வணிகங்கள், மருத்துவர்கள் அல்லது வழக்கறிஞர்கள் படிவம் 4 -ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்திற்கு மேல் உள்ள ஃப்ரீலான்ஸர்களும் இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.
படிவம் 5, நிறுவனங்கள், LLP -கள், AOP -கள் அல்லது BOI -களாக பதிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கான படிவமாகும்.
படிவம் 6, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 11 இன் கீழ் விலக்கு அளிக்கப்படாத நிறுவனங்களுக்கானது.
139(4A), 139(4B), 139(4C), அல்லது 139(4D) ஆகிய பிரிவுகளின் கீழ் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் படிவம் 7 -இல் ஐடிஆர் -ஐ நிரப்ப வேண்டும்.
ஐடிஆர் தாக்கல் செய்யும் முன் ஐடிஆர் படிவங்கள் தொடர்பான இந்த விஷயங்களை நினைவில்கொண்டு சரியான படிவத்தை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும்.