யானைகள் பற்றி நீங்கள் அறிந்திராத 10 சுவாரஸ்ய தகவல்கள்

S.Karthikeyan
Jul 15,2024
';


யானைகள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வரும் விலங்கு என்றாலும், அவற்றை பற்றிய சில தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை

';


உலகின் மிகப்பெரிய விலங்கு என்றால் அது யானை தான். அதுவும் ஆப்பிரிக்க சவன்னா தான் எல்லா யானைகளைவிடவும் பெரியது. ஒரு யானையின் எடை சராசரியாக 6,000 கிலோ.

';


கிட்டதட்ட 60, 70 ஆண்டுகள் வாழும் ஆண் யானைகள் முழுமையான உடல் வடிவத்தைப் பெற கிட்டதட்ட 35 - 40 ஆண்டுகள் ஆகுமாம். பிறக்கும்போது ஒரு குட்டி யானை 120 கிலோ எடையுள்ளதாக இருக்கும்.

';


யானைகளை காதுகளை வைத்துதான் அடையாளம் கண்டுபிடிக்கிறார்கள். ஆசிய, ஆப்பிரிக்கா யானைகளுக்கு காதுகள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

';


யானைகளுக்கு உணர்ச்சிகள் தும்பிக்கையில் தான் இருக்கிறது. ஒருமுறை அதிகபட்சமாக 8 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கும் யானைகள்.

';


யானைக்கு தந்தங்கள் தான் உண்மையான வெட்டுப் பற்கள். 2 வயதாகும்போது யானைக்கு தந்தங்கள் வளரத் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

';


தந்தங்களை உணவுகளை குத்தவும், பட்டைகள், வேர்களை எடுக்கவும் யானைகள் பயன்படுத்தும். இந்த தந்தங்களுக்காக தான் அவை கொல்லப்படுகின்றன என்பதும் வேதனையான உண்மை செய்தி.

';


யானையின் தோல் மிகவும் தடிமனானது. இந்த தோல் மடிப்பு, சுருக்கங்கள் மூலம் யானை 10 மடங்கு தண்ணீரை தக்கவைத்துக் கொள்ள முடியும். யானைகள் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.

';


ஒரு நாளைக்கு 150 கிலோ உணவு வரை சாப்பிடும். நாளின் முக்கால்வாசி வரை உணவை உண்பதற்காகவே அலைந்து திரியும். ஒன்றையொன்று தொடர்பு கொள்ள ஒலிகளை யானைகள் பயன்படுத்துகின்றன. நில அதிர்வுகளையும் சமிக்கைகளாக கொடுக்கும்.

';


ஒரு குட்டி யானை பிறந்து 20 நிமிடங்களுக்குள் நிற்கும். 1 மணி நேரத்திற்குள் நடக்க முடியும். யானைகளின் கூட்டம் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். யானைக்கு ஞாபக சக்தி அதிகம். அவை அவ்வளவு எளிதில் ஒன்றை மறக்காது.

';


கடந்த நூற்றாண்டில் சுமார் 90% ஆப்பிரிக்க யானைகள் அழிக்கப்பட்டுவிட்டன. இன்று 415,000 காட்டு யானைகள் உயிருடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய யானைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன, கடந்த மூன்று தலைமுறைகளில் குறைந்தது 50% குறைந்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story