தேவையான அனைத்து ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதில் தோனி உறுதியாக இருப்பார்.
பழங்கள், நட்ஸ், பால் போன்றவற்றை காலையில் சாப்பிடுவார். பருப்பு, அரசி ஆகிவற்றை மதியத்திற்கும், சப்பாத்தி, சேலட் போன்றவற்றை இரவும் சாப்பிடுவார்.
அவர் எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தவிர்ப்பவர்.
சர்க்கரை நிறைந்த ஜூஸ்கள், கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்துவிடுவார்.
இந்த வயதிலும் அவர் உடற்பயிற்சி செய்வதை கைவிடவில்லை.
தோனி சுமார் 7 மணிநேரம் சராசரியாக தூங்குவார். இதுவும் அவரின் சுறுசுறுப்புக்கு முக்கிய காரணம்.
இவர் கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற நேரங்களில் கால்பந்து, பேட்மிண்டனும் விளையாடுவார்.