தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைப்பதில் காலை உணவுக்கும் இரவு உணவுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது.
வேகமான எடை இழப்புக்கு உதவும் சில இரவு உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மெலிந்த புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ள கொண்டைக்கசலை எடை இழப்புக்கு மிகச்சிறந்தது. சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடனும், சுண்டலாகவும் இதை உட்கொள்ளலாம்.
புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ள ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் இட்லி வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதோடு, தொப்பையை குறைக்கவும் உதவும்.
இரவில் ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை சாலட்டாக உட்கொள்வது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். இதனால் நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும்.
முட்டை ஒரு சிறந்த எடை இழப்பு உணவாக உள்ளது. புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ள முட்டையில் கலோரிகளும் குறைவாக உள்ளன.
ஜவ்வரிசி ஒரு லேசான உணவு. எடையை கட்டுப்படுத்த இரவு உணவில் ஜவ்வரிசி கிச்சடியை உட்கொள்ளலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை