வேர்க்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளதால், இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
வேர்க்கடலையில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், இவை எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடுவது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வாயு, அஜீரணம், மலச்சிக்கலில்\இருந்து நிவாரணம் பெறலாம்.
ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிட்டால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம், மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஊறவைத்த வேர்க்கடலையை தொடர்ந்து உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவும்.
ஊறவைத்த வேர்க்கடலையில் புரோட்டீன் அதிகமாக உள்ளதால், இவை தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
வேர்க்கடலையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால், இவை சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.