இஞ்சியில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது, அவை வலி மற்றும் நாள்பட்ட அழற்சியைக் குறைக்கும். உணவில் இஞ்சி வேரை சேர்த்துக் கொண்டால் ஒட்டுமொத்த நரம்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்
மிளகாய்களில் கேப்சைசின் என்ற செயலில் உள்ள பாகம் நிரம்பியுள்ளது, இது நரம்பு வலியைப் போக்க உதவும் இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது.
மஞ்சளில் குர்குமின் எனப்படும் வேதிப்பொருள் இருப்பதால் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் வலிக்கு எதிராக செயல்படுகிறது
சூர்நகம் என்பது தென்னாப்பிரிக்காவின் பிரபலமான மூலிகையாகும், இது மூட்டுவலியை சரி செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது வீக்கம் மற்றும் அசௌகரியத்தில் இருந்து விடுபட உதவுகிறது
ஒற்றைத்தலைவலி, தலைவலி, வயிற்று வலி மற்றும் பல்வலி ஆகியவற்றின் பாதிப்பைக் குறைப்பதில் ஃபீவர்ஃபியூ சிறந்து திகழ்கிறது. இந்த ஆயுர்வேத மூலிகை உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வலிக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பூண்டு உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சியாட்டிகா வலியைப் போக்கக்கூடிய அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
கற்றாழை, அலோயின் போன்ற கிளைகோசைடுகளின் வளமான மூலமாகும், இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது வலி மற்றும் அழற்சியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.