வறுத்த உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்து கொள்ளும். மேலும் செரிமான அமைப்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பால் பொருட்களில் உள்ள லாக்டோஸை ஜீரணிக்க சிரமப்படுகிறார்கள்.
இது செரிமான அசௌகரியம், வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்த கூடும்.
பசையம் சாப்பிடுவது பசையம் உணர்திறன் அல்லது செலியாக் நோய் உள்ளவர்களுக்கு வீக்கம் மற்றும் குடல் சேதத்தை ஏற்படுத்தும்.
அதிக இறைச்சி மற்றும் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
செயற்கை இனிப்புகள், மாவு கொண்டு தயாரிக்கபட்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம்.
இந்த உணவுகள் குடலின் மென்மையான சமநிலையை சீர்குலைத்து வீக்கத்தை ஏற்படுத்தும்.