40 வயதிற்குப் பிறகு உங்கள் எலும்பின் அடர்த்தியை மேம்படுத்தவும், மூட்டுகளை வலுப்படுத்தவும் வலிமை பயிற்சிகளை செய்ய வேண்டியது அவசியம்.
பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.
மன அழுத்தம் இதயம் சம்பத்தப்பட்ட நோய்க்கு ஒரு முக்கியமான ஆபத்து காரணியாகும். எனவே இதற்கு முன்னுரிமை அவசியம்.
40 வயதிற்குப் பிறகு பல்வேறு உடல் மற்றும் மன நலன்களுக்காக தூக்கத்தை கடைபிடிப்பது முக்கியம்.
தூக்கமின்மை இதய நோய், மனச்சோர்வு, எடை அதிகரிப்பு மற்றும் வீக்கம் உள்ளிட்ட பல உடல்நல விளைவுகளுடன் தொடர்புடையது
40 வயதிற்குப் பிறகு வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம். அவை நோயை முன்கூட்டியே கணிக்க உதவும்.
புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்றவற்றை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியலாம்.
மது மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடுவது ஆரோக்கிய நிலையை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்க பொதுவெளியில் அதிகம் பேசி பழகுங்கள். இது மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.