ஒமேகா 3 அதிகமாக உள்ள சால்மன் கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ப்ரோட்டீன் முடி வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான விளைவுகளை காட்டுகிறது. ப்ரோட்டீன் அதிகமாக உள்ள முட்டைகள் முடி உதிர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.
புரதச்சத்தும் வைட்டமின் பி5-வும் அதிகமாக உள்ள தயிர் முடி மெலிதாவதையும் முடி உதிர்வதையும் தவிர்க்கிறது.
ஒமேகா 3 அதிகமாக உள்ள வால்நட் முடி வளர்ச்சிக்கு மிகவும் எற்றதாக இருக்கும். இதனால் முடி உதிர்வதும் குறையும்
இரும்புச்சத்து முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை முடி வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.
ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் ஈ மற்றும் பயோடின் உள்ள அவகாடோ முடி வளர்ச்சிக்கு ஒரு சூப்பர் ஃபுட்டாக இருக்கும்.
வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள் கொலோஜன் உற்பத்தியில் உதவி கூந்தல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
இரும்புச்சத்து, பொடாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சக்கரைவல்லி கிழங்கு முடி உதிர்வதை தடுக்க உதவுகிறது.
பீடா கரோடின் அதிகம் உள்ள கேரட் முடி வளர்ச்சிக்கு அபரிமிதமான பலன்களை அளிக்கின்றது
இவை முடிக்காலை நீரேற்றமாக வைத்து, முடியை வலுவாக்கி முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன.