பூண்டில் இருக்கும் அலிசின் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
புரதச்சத்துடன் முட்டையில் இருக்கும் பயோடின் மற்றும் பிற வைட்டமின்கள் தாடி வளர்வதை துரிதப்படுத்துகின்றன.
இதில் இருக்கும் துத்தநாகம் தாடியை அடர்த்தியாக பராமரிக்க உதவுகிறது.
ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ள அவகேடோ தாடியின் ஒட்டுமொத்த பராமரிப்பில் உதவுகிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள சால்மன் பளபளப்பான தாடி வளர உதவுகிறது.
புரதம் மற்றும் வைட்டமின் அதிகம் உள்ள தயிர், தாடியில் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றது.
சிட்ரஸ் பழங்கள் ஆரோக்கியமான தாடிக்கு தேவையான கொலோஜன் உற்பத்தியில் உதவியாய் இருக்கின்றன.
இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை வகைகளை தொடர்ந்து உட்கொள்வது அழகான தாடியை பெற உதவும்
பீடா கரோடின் அதிகமாக உள்ள சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆரோக்கியமான தாடியை பராமரிப்பதில் உதவியாய் இருக்கிறது.
பயோடின் மற்றும் வைட்டமின் ஈ உள்ள பாதாம் முடி வளர்ச்சியில் உதவுகின்றது.