வேர்கடலையில் இருக்கும் மோனோசேசுரேடட் மற்றும் பாலிஅன்சேசுரேடட் கொழுப்பு, உடலில் கொழுப்பை குறைத்து இதய அபாயங்களை குறைக்கிறது.
கலோரி அதிகமாக இருந்தாலும் வேர்கடலையை உட்கொண்டால் உடல் எடையை பராமரிகலாம் என பல அய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வைட்டமின் ஈ அதிகமாக இருப்பதால், வேர்கடலை மேம்பட்ட மூளை செயல்பாட்டில் உதவுகிறது. இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
இரத்த சர்க்கரை அளவை இவை அதிகரிக்காது என்பதால், வேர்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக பார்க்கப்படுகின்றது.
வேர்கடலையில் அதிக புரதம் இருப்பதால், உடற்பயிற்சிக்கு பிறகு தசைகள் மீட்பில் இவை உதவுகின்றன
வேர்கடலையில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியத்தை பாதுகாத்து மூப்பை தவிர்க்கிறது.
நார்ச்சத்து அதிகமாக உள்ள வேர்கடலை, செரிமானத்தை சீராக்கி கொலோன் சேன்சர் அபாயத்தை தவிர்க்கிறது.
அதிக அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ள வேர்கடலை நாள் முழுவதற்குமான ஆற்றலை நமக்கு அளிக்கின்றது.