இதமான இளநீரின் 10 மாயாஜால நன்மைகள்

Vijaya Lakshmi
Sep 28,2023
';

நீர்ச்சத்து

போதுமான அளவு இளநீர் பருகும் போது, கோடையில் அதிக வெப்பத்தினால் நமது உடலிலிருந்து வியர்வையாக வெளியேறும் நீர் சத்தை சமன் செய்ய உதவுகிறது.

';

கலோரிகள் குறைவு

இளநீர் இனிப்பு சுவை கொண்டது என்றாலும் அதில் கலோரிகள் மிக குறைவு. இதில் வைட்டமின் சி மற்றும் மேங்கனீஸ் போன்ற விட்டமின்கள், மினரல்கள் போன்றவை நாம் உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றலை வழங்கும்.

';

பொட்டாசியம் நிறைந்தது

இது பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும், இது சரியான தசை செயல்பாடு, இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியம்.

';

செரிமானத்திற்கு உதவுகிறது

இளநீரில் பயோஆக்டிவ் என்சைம்கள் உள்ளன, அவை செரிமானத்திற்கு உதவுகின்றன மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன.

';

சிறுநீரக கற்கள்

இளநீர் அடிக்கடி பருகுவதன் மூலம், சிறுநீர் கழிப்பதை அதிகமாக்கி, கற்களை உருவாக்கக்கூடிய தாதுக்களின் செறிவை நீர்த்துப்போகச் செய்கிறது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

';

ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

இளநீரில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன.

';

உயர் இரத்த அழுத்தம்

இளநீர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீர் குடித்தால் இரத்த அழுத்தம் குறையும் என்று ஏற்கனவே ஒரு ஆய்வு தகவல் அளித்தது.

';

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இளநீரில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளடக்கம் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

';

சரும ஆரோக்கியம்

ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்திருக்கும் இதில் சருமத்தில் தோன்றும் கோடுகள், சுருக்கங்களை குறைக்கிறது. சருமத்தில் ஏற்படும் பிற சேதங்களையும் தடுக்கிறது.

';

நீரிழப்புக்கு நல்லது

நீரிழப்பு மற்றும் தலைவலி போன்றவற்றுக்கு இளநீர் சிறந்த நிவாரணிகளில் ஒன்றாகும். இது உங்கள் உடலில் இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்புகிறது.

';

VIEW ALL

Read Next Story