சியா விதைகளில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும்.
ஆளிவிதைகள் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். ஆளிவிதையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவும்
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் செலினியம் உள்ளன. இவை அனைத்தும் இன்சுலின் உணர்திறனுக்கு உதவும். இருப்பினும், கலோரிகள் அதிகம் என்பதால் அவற்றை மிதமாக உட்கொள்ளுங்கள்.
பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எள் விதைகளில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதிக நார்ச்சத்து மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் குறிப்பிட்ட கலவைகள் காரணமாக வெந்தய விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.
சீரக விதைகள் கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சிக்கல்களைக் குறைக்கவும் உதவும்.
புரதச்சத்து, நார்ச்ச்த்து, ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ள தனியா இரத்த சர்க்கரை அளவை சீரமைக்க உதவுகிறது
குறைவான க்ளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ள அமரந்த விதைகளில் நார்த்தத்து மற்றும் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும்.