ஜனவரி 22, 2024 அன்று, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் ராமரில் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு, அயோத்தி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற சுற்றுலா தலமாகவும் மாறியுள்ளது.
ராமர் கோயிலைத் தவிர, அயோத்தியில் உள்ள முக்கியமான இடங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்
பொற்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது தங்கத்தால் ஆனது. இந்த கோவிலில் ராமர், இலட்சுமணன் மற்றும் அன்னை சீதையின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கோவிலின் முக்கிய ஈர்ப்பு இங்கு பாடல் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆகும்.
அயோத்தியின் நயா காட் அருகே அமைந்துள்ள ராமர், அன்னை சீதா, லக்ஷ்மணன், அனுமன், சுக்ரீவர் மற்றும் பரதன் ஆகியோரின் கோயில் ஆகும். இந்த இடத்தில் ராமர் அஸ்வமேத யாகம் செய்ததாகவும், அதன் பிறகு இங்கு கோயில் கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த ஹனுமான் கோவிலை அவத் நவாப் கட்டினார். இங்கு செல்ல 76 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இந்த கோவிலில் ராமர், அனுமன் மற்றும் அவர்களின் அன்னையர்களின் சிலைகள் உள்ளன.
எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு, ராமரின் அருள் கிடைக்க சரயு நதியில் நீராடுவது அவசியம் என்பது நம்பிக்கை. இந்த புனித நதியைக் காணவும், குளிக்கவும் ஏராளமானோர் வருகின்றனர்.
16 ஆம் நூற்றாண்டில் ராமசரித்மனாஸ் என்ற ராமாயண இதிகாசத்தை கோஸ்வாமி துளசிதாஸ் இயற்றியதாக நம்பப்படுகிறது. இந்த நினைவிடம் கோஸ்வாமி துளசிதாஸின் நினைவாக 1969 ஆம் ஆண்டு கட்டப்பட்ட துளசிதாஸ் பவன் இது
ஜெயின் மந்திர் எனப்படும் இந்த கோவில் கண்கவர் வேலைப்பாடுகளால் தங்கத்தில் தகதகவென ஜொலிக்கிறது
இந்த படித்துறை சரயு நதியில் மிகவும் விசேஷமான இடம் ஆகும். அயோத்தி நகருக்கு வருபவர்கள், இங்கு சென்று வருவது வழக்கம்