இரவில் தவிர்க்க வேண்டிய இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க!

Malathi Tamilselvan
Jan 07,2024
';

டின்னர்

இரவு உணவு எப்போதுமே இலகுவானதாக, சுலபமாக செரிமானம் ஆகக்கூடியதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பல்வேறு நோய்கள் பாதிக்கும்

';

தக்காளி

உங்களுக்கு ஆசிட் ரிஃப்ளக்ஸ் இருந்தால் அல்லது கர்ப்பமாக இருந்தால், படுப்பதற்கு முன் தக்காளி போன்ற அமில உணவுகளை சாப்பிடுவது உணவுக்குழாயில் அசௌகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும்.

';

உலர் பழங்கள்

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உலர் பழங்களை இரவில் உண்ணக்கூடாது. இரவில் லேசான உணவுகளையே உண்பது நல்லது

';

பீட்சா

அமிலத்தன்மை கொண்ட தக்காளி சாஸ், சுத்திகரிக்கப்பட்ட ரொட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள சீஸ், இரவு உணவுக்கு வேண்டாத விருந்தாளி. கனமாக வயிறு இருந்தால், தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். வேறு உணவே இல்லையென்றால், ஆரோக்கியமான பீட்சாவைத் தேர்வு செய்யவும்.

';

காபி

உடலில் நீண்ட நேரம் தங்கியிருக்கும் காபியில் உள்ள காஃபின் உறக்கத்தைக் கெடுத்துவிடும். தூங்கச் செல்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அதைத் தவிர்ப்பது நல்லது. காஃபின் உங்கள் மூளையை அமைதி பெறச் செய்யாது. அதன் விளைவுகள் 8 முதல் 14 மணிநேரம் வரை நீடிக்கும், எனவே காபியை தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டாம்

';

சாக்லேட்

காஃபின் உள்ள சாக்லேட்டும், காபியைப் போலவே தூக்கத்தைத் தள்ளிப்போடும். எனவே, உறங்கும் நேரத்துக்கு அருகில் சாக்லேட் உட்கொண்டால், தூங்குவதில் சிரமம் ஏற்படலாம்.

';

சிப்ஸ்

அதிக கொழுப்புள்ள உணவுகள், உங்கள் தூக்கத்தைத் தொந்தரவு செய்யும்

';

இனிப்பு

அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட எந்த தானியமும் தூங்குவதை கடினமாக்குகிறது. சிறந்த இரவு தூக்கத்திற்கு குறைந்த சர்க்கரை, நார்ச்சத்து நிறைந்த தானியங்களை தேர்வு செய்யவும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story