ஹிட்லரை கைது செய்த ஜான் எப் கென்னடி! இந்திய தேர்தல் சுவாரஸ்யம்
மேகலாயா மாநிலத்தைச் சேர்ந்தவர் அடால்ப் லூ ஹிட்லர். இவர் பிரபலமான அரசியல்வாதி.
இவர் 2008 ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார்.
அப்போது ஹிட்லர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஹிட்லர் தொகுதியில் இருந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஹிட்லரை இந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்தார்.
அந்த காவல்துறை கண்காணிப்பாளர் பெயர் என்ன தெரியுமா? ஜான் எப் கென்னடி.
இந்த சம்பவத்தை அடுத்த நாள் செய்திதாள் ஒன்று ஹிட்லரை ஜான் எப் கென்னடி கைது செய்துவிட்டதாக தலைப்பு செய்தியிட்டது.
ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரி. வரலாற்றில் இவரை படிக்காமல் பள்ளிப் படிப்பை யாரும் முடித்திருக்கமாட்டர்கள்.
ஜான் எப் கென்னடி, அமெரிக்கா முன்னாள் அதிபர் ஆவார். இவரும் உலக புகழ்பெற்றவர்.